
sri-lanka-beat-india-by-7-wickets-in-the-3rd-t20i-and-win-the-t20i-series (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தவான், படிக்கல், சாம்சன், கெய்க்வாட், ராணா என அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் வாணிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.