Advertisement
Advertisement
Advertisement

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணி எனும் மோசமான சாதனையை இலக்கை அணி படைத்துள்ளது.

Advertisement
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 31, 2024 • 03:41 PM

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது குசால் பெரேரா, பதும் நிஷங்கா ஆகியோரது ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது. இதில் குசல் பெரெரா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்களையும், பதும் நிஷங்கா 32 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 31, 2024 • 03:41 PM

அதன்பின் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபடத்து. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படை இந்திய அணிக்கு 8 ஓவர்களீல் 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின் விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30 ரன்களையும், கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 4 பவுண்டரி ஒரு சிக்ஸச்ர் என 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.

Trending

இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹா்திக் பாண்டியா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக மோசமான சாதனையை படைத்துள்ளது. அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (சூப்பர் ஓவர் உட்பட) என்ற மோசமான சாதனையை இலங்கை படைத்துள்ளது. இந்த பட்டியலில் இலங்கை அணி 105 தோல்விகளுடன் முதல் இடத்திலும், வங்கதேச அணி 104 தோல்விகளுடன் இரண்டாம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 101 தோல்விகளுடன்  3ஆவது இடத்திலும் உள்ளன.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணி

  • இலங்கை - 105 தோல்வி
  • வங்கதேசம் - 104 தோல்வி
  • வெஸ்ட் இண்டீஸ் - 101 தோல்வி
  • ஜிம்பாப்வே - 99 தோல்வி
  • நியூசிலாந்து - 99 தோல்வி

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement