Advertisement

ENG vs SL, 2nd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; பதும் நிஷங்காவிற்கு இடம்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement
ENG vs SL, 2nd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; பதும் நிஷங்காவிற்கு இடம்!
ENG vs SL, 2nd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; பதும் நிஷங்காவிற்கு இடம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 28, 2024 • 10:43 PM

இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 28, 2024 • 10:43 PM

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 29) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Trending

மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகிய மார்க் வுட்டிற்கு மாற்றாக ஓல்லி ஸ்டோன் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அவரைத்தவிர, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களே இந்த டெஸ்டிற்கான பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியின் பிளேயிங் லெவனில் பதும் நிஷங்கா மற்றும் லஹிரு குமாரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங்கில் சோபிக்க தவறவிய குசால் மெண்டிஸிற்கு பதிலாம பதும் நிஷங்காவையும், பந்துவீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோவிற்கு பதிலாக லஹிரு குமாராவையும் இங்கிலாந்து அணி பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய மற்ற வீரர்கள் அனைவரும் இந்த பிளேயிங் லெவனில் தங்கள் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். 

இலங்கை அணி பிளேயிங் லெவன்:  திமுத் கருணாரத்ன, பதும் நிஷங்கா, நிஷான் மதுஷ்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (கே), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித்த ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா, மிலன் ரத்நாயக்க

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டேன் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கே) ஜோ ரூட், ஹாரி புரூக் , ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ்,  ஒல்லி ஸ்டோன், சோயிப் பஷீர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement