
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரானது தற்போது முடிவடைந்து இந்திய அணி நாடு திரும்பியுள்ள வேளையில் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது 20ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்காக தாங்கள் இந்தியா வந்து விளையாட வேண்டுமெனில் அதற்கு முன்னர் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது. அதன்படி இந்திய தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா செல்லும் இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்த டி20 தொடர் முடிவடைந்த பிறகே அவர்கள் இந்தியா வந்து விளையாட இருக்கின்றனர்.