
Sri Lanka Former Captain Suranga Lakmal Announces Retirement; Series Against India Will Be Last (Image Source: Google)
இலங்கை அணி இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் இந்தியாவுடான தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிக்கவுள்ளதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் இன்று அறிவித்துள்ளார்.
இலங்கை அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமான சுரங்கா லக்மல் இதுவரை 68 டெஸ்ட், 86 ஒருநாள், 11 டி20 போட்டிகளில் 285 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.