
Sri Lanka have announced a 22-member squad for their two-Test home series against West Indies (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டும் கொண்ட தொடரில் விளையாட இலங்கை வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 29ஆம் தேதியும் கல்லேவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான திமுத் கருணரத்னே தலைமையிலான 22 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா இலங்கை டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூசின் பேயரும் இதில் இடம்பிடித்துள்ளது.