
Sri Lanka Name Rumesh Ratnayake As Interim Coach For Australia Tour (Image Source: Google)
இலங்கை அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
பிரவரி 11ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது பிப்ரவரி 20ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிகள் அனைத்தும் சிட்னி, மனுகா ஓவல், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இத்தொடருக்கான இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.