
Sri Lanka name squad for Test series against India (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடரும், அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடக்கின்றன. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2 மற்றும் 3ஆவது டி20 போட்டிகள் முறையே வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடக்கின்றன.
அதன்பின்னர் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4ம் தேதி மொஹாலியிலும், 2வது டெஸ்ட் போட்டி மார்ச் 12ம் தேதி பெங்களூருவிலும் தொடங்கி நடக்கின்றன.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.