அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது சவாலானது - தசுன் ஷானகா
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்குமென இலங்கை அணியின் கேப்டன் ஷானகா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷானகா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அனுபவ வீரர்களான மேதியூஸ், சண்டிமல், குசால் பெரேரா ஆகியோ தொடரிலிருந்து விலகியும், குசால் மெண்டிஸ், டிக்வெல்லா, குணத்திலகா ஆகியோர் பயோ பபுள் விதிகளை மீறிய குற்றத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர்.
Trending
இதன் காரணமாக பரீட்சையமில்லாத இலங்கை அணியை நேற்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில், அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்குமென இலங்கை அணியின் கேப்டன் ஷானகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“எங்கள் அணியில் அனுபவ வீரர்கள் இடம்பெறாதது பெரும் ஏமாற்றமாக உள்ளது. ஆனால் அதேசமயம் இந்திய அணியும் ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களை மட்டுமே கொண்டுள்ளதால், நாங்கள் எங்களுக்குச் சமமான அணியுடன் தான் மோதவுள்ளோம்.
ஆனாலும் இந்திய அணியில் ஒரு சில் அனுபவ வீரர்கள் இடம்பெற்றிருப்பதில் எங்களுக்கு இத்தொடர் நிச்சயம் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எப்படிபட்ட சவால்களையும் சந்திக்கும் தைரியம் எங்களிடம் உள்ளது. அதனால் எங்களால் முடிந்த அளவு எதிரணிக்கு சவாலளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now