Advertisement

SL vs WI, 2nd Test: மழையால் தாமதமான ஆட்டம்; இலங்கை சிறப்பான தொடக்கம்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 29, 2021 • 21:09 PM
Sri Lanka Openers Start Strong After A Rain-Delayed Start Against West Indies
Sri Lanka Openers Start Strong After A Rain-Delayed Start Against West Indies (Image Source: Google)
Advertisement

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நைடைபெற்று வருகிறது. ஏற்கெனவே தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி, இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது.

இப்போட்டிக்கு முன்னதாக மழை குறுக்கிட்டதன் காரணமாக பகுதி நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமலேயே பாதிக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Trending


அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் திமுத் கருணரத்னே - பதும் நிஷங்கா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுத் கருணரத்னே 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்து நிஷங்கா அரைசதம் கடந்து அசத்தினார். 

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 113 ரன்களைச் சேர்த்துள்ளது. பதும் நிஷங்கா 61 ரன்களுடனும், ஒஷாதா ஃபெர்னாண்டோ 2 ரன்களுடனும் நாளைய போட்டியை தொடரவுள்ளனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement