Advertisement

ENG vs SL, 3rd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement
ENG vs SL, 3rd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ENG vs SL, 3rd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 06, 2024 • 09:57 AM

 இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில்,  இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 06, 2024 • 09:57 AM

இந்த போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும் என்பதாலும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. முன்னதாக இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அறிமுக வீரர் ஜோஷ் ஹல் சேர்க்கப்பட்டு, மேத்யூ பாட்ஸ் நீக்கப்பட்டுள்ளார். 

Trending

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் குசால் மெண்டிஸ் மற்றும் விஷ்வா ஃபெர்னாண்டோ ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த போட்டியில் விளையாடிய நிஷான் மதுஷ்கா மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இலங்கை பிளேயிங் லெவன்: திமுத் கருணாரத்ன, பதும் நிஷங்கா,குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (கே), கமிந்து மெண்டிஸ், விஸ்வா ஃபெர்னாண்டோ, அசித்த ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா, மிலன் ரத்நாயக்க

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டேன் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கே) ஜோ ரூட், ஹாரி புரூக் , ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜோஷ் ஹல், ஒல்லி ஸ்டோன், சோயிப் பஷீர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement