
Sri Lanka vs England, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probable X (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேவேளையில், சுவாரஸ்யமான கட்டத்திலும் உள்ளது. குரூப் ஒன்றிலிருந்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது.
ஆனால் இங்கிலாந்து - இலங்கை இடையேயான நாளைய போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால் 7 புள்ளிகளை பெற்று நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும். அதேவேளையில் இலங்கை அணி வெற்றிபெற்றால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
இங்கிலாந்து - இலங்கை இடையேயான இந்த முக்கியமான போட்டி நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த போட்டி சிட்னியில் நடப்பதால், இலங்கையை குறைத்து மதிப்பிட்டு, இங்கிலாந்து கண்டிப்பாக வென்று விடும் என்று கூறமுடியாது.