IND vs SL, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவிலுள்ள பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.
ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தோடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவிலுள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
- நேரம் - மாலை 3 மணி
- இடம்- ஆர். பிரமதாச மைதானம்
போட்டி முன்னோட்டம்
இந்திய அணி
விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால், ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரையில் பிரித்வி ஷா, தேவ்தத் படிக்க, ருதுராஜ் கெய்க் வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், மனீஷ் பாண்டே என பல அதிரடி வீரர்கள் இருப்பது அணியின் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் என பல வேரியேஷன்களைக் கொண்டுள்ள பந்துவீச்சாளர் நிச்சயம் எதிரணி வீரர்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேதன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி, நிதீஷ் ராணா என பலர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளதால் இவர்களின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகரிடத்தில் அதிகரித்துள்ளது.
இலங்கை அணி
கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை அணி அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் பெரும் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் அணியில் நிலையான கேப்டன் என யாரும் செயல்படாமல் இருந்துவருகின்றனர்.
இந்திய அணியுடனான தொடரிலும் கூட இலங்கை அணி தசுன் ஷானகா தலைமையில் விளையாடவுள்ளது. மேலும் இங்கிலாந்து தொடரின் போது பயோ பபுள் விதியை மீறிய அனுபவ வீரர்கள் குசால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, குணத்திலக ஆகியோர் இத்தொடரிலும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமில்லாம காயம் காரணமாக முன்னாள் கேப்டன் குசால் பெரேரா, பினுரா ஃபெர்னாண்டோ ஆகியோரும் விலகியுள்ளது அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழக்க செய்துள்ளது.
மேலும் இத்தொடரில் விளையாடும் பல வீரர்கள் இதுநாள் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதும் இல்லை. இதனால் வலிமை வாய்ந்த இந்திய அணியிடம் இவர்களின் பாட்சா செல்லுமா என்பது கேள்விகுறி தான்.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 159
- இலங்கை வெற்றி - 56
- இந்தியா வெற்றி - 91
- முடிவில்லை - 12
உத்தேச அணி
இலங்கை - பாதும் நிசங்கா, மினோத் பானுகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா, தாசுன் ஷானகா (கே), சரித் அசலங்கா, சாமிகா கருணாரத்ன, லக்ஷன் சண்டகன், துஷ்மந்தா சாமிரா, அசிதா ஃபெர்னாண்டோ.
இந்தியா - ஷிகர் தவான்(கே), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன்
- பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், தாசுன் ஷானகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ
- ஆல்ரவுண்டர்கள் - ஹார்திக் பாண்டியா, வாணிந்து ஹசரங்கா, தனஞ்சய டி சில்வா
- பந்து வீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், லக்ஷன் சண்டகன்
Win Big, Make Your Cricket Tales Now