IND vs SL, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நாளை (ஜூலை 27) நடக்கிறது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நாளை (ஜூலை 27) நடக்கிறது. இத்தோடரில் முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
- இடம் - பிரேமதாசா மைதானம், கொழும்பு
- நேரம் - இரவு 8 மணி
போட்டி முன்னோட்டம்
இந்திய அணி
இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில் அபாரமான வெற்றியைப் பெற்றுள்ள இந்திய அணி அதே உற்சாகத்துடன், இரண்டாவது போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
அதன்படி அதிரடி வீரர்கள் பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் பேட்டிங்கில் அசத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேசமயம் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் அசத்திவருவதால், இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இலங்கை அணி
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, முதல் டி20 போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் அந்த அணியில் சரித் அசலங்காவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதே இத்தோல்விக்கு காரணம்.
இதனால் நாளைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் இலங்கை அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
இரு அணிகளும் இதுவரை 20டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14 முறை இந்தியாவும், 5 முறை இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் ஒரு போட்டி முடிவின்றி அமைந்துள்ளது.
உத்தேச அணி
இந்தியா: பிரித்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா அல்லது கிருஷ்ணப்பா கவுதம், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல் அல்லது ராகுல் சாஹர்.
இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுகா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, ஹசரங்கா அல்லது ஜெயவிக்ரமா, உதனா, சமீரா, அகிலா தனஞ்ஜெயா.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன், இஷான் கிஷன்
- பேட்ஸ்மேன்கள் - பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ
- ஆல்ரவுண்டர்கள் - வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன
- பந்து வீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், துஷ்மந்தா சமீரா
Win Big, Make Your Cricket Tales Now