IND vs SL, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறவுள்ளது
ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தோடரில் விளையாடவுள்ளது.
இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபாரமான வெற்றியைப் பெற்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
- நேரம் - மாலை 3 மணி
- இடம்- ஆர். பிரமதாச மைதானம்
போட்டி முன்னோட்டம்
இந்திய அணி
ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியின் விழிம்பிள் இருந்த இந்திய அணியை தீபக் சஹார் தனி ஒருவனாக போராடி வெற்றியைத் தேடித்தந்தது, இந்திய அணிக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதனால் இலங்கை அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியையும் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி இப்போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியைப் போறுத்தவரை அனைவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளதால், நாளைய போட்டியிலும் எந்தவொரு மாற்றமும் இன்றி இதே அணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி
தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி, கையிலிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டியை இழந்து பெரும் அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது. அந்த அணியின் பேட்டிங் ஓரவிற்கு தேறினாலும், பந்துவீச்சில் சொதப்பிய காரணத்தினால் அவர்களால் அப்போட்டியில் வெற்றியைப் பெறமுடியவில்லை.
இதனால் நாளை நடைபெறும் 3ஆவது ஒருநாள் போட்டியிலாவது இலங்கை அணி வெற்றிபெற்று ஆறுதலைத் தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இலங்கை அணியில் ஒருசில மாற்றங்களும் இருக்கும் என்றே நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 161
- இலங்கை வெற்றி - 56
- இந்தியா வெற்றி - 93
- முடிவில்லை - 12
உத்தேச அணி
இலங்கை - அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கே), வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, துஷ்மந்தா சாமீரா, லக்ஷன் சண்டகன், கசுன் ராஜிதா.
இந்தியா - ஷிகர் தவான் (கே), பிருத்வி ஷா/ தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன், மனீஷ் பாண்டே/ சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன், மினோத் பானுகா
- பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், சரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ
- ஆல்ரவுண்டர்கள் - குர்னால் பாண்டியா, வாணிந்து ஹசரங்கா, தனஞ்செய டி சில்வா
- பந்து வீச்சாளர்கள் - தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல்
Win Big, Make Your Cricket Tales Now