இலங்கை vs நமீபியா, உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதுகின்றன.
எட்டாவது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை (16ஆம் தேதி) தொடங்குகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல 16 அணிகள் கலந்துகொண்டு மோத உள்ளன. ஐசிசி தரவரிசை பட்டியலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.
இந்த 8 அணிகளும் 22ஆம் தேதி தொடங்கும் சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகள் முதல் சுற்று ஆட்டங்களில் இருந்து தேர்வாகும். இந்த முதல் சுற்று ஆட்டங்கள் ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் சுற்றில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், 2014ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
Trending
‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் உள்ளன. இந்த இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் சூப்பர் 12 சுற்றில் கலந்துகொள்ளும். முதல் சுற்றில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகள் உறுதியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறக்கூடும். ஏனெனில் இந்த இரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளை காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை வலுவானவை.
தொடக்க நாளான நாளை இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 1.30 மணிக்கு நடைபெறும் 2ஆவது ஆட்டத்தில் நெதர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.
இலங்கை அணியை பொறுத்தவரையில் சமீபத்தில் ஆசிய கோப்பையை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற தவறிய இலங்கை அணி, ஆசிய கோப்பையில் பலம் வாய்ந்த இந்தியா, இலங்கை அணிகளை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் சாய்த்தது.
நமீபியா அணி கடந்த ஆண்டு தனது அறிமுக தொடரிலேயே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியிருந்தது. டேவிட் வைஸ், ரூபன் டிரம்பில்மான் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படக்கூடும் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தனர்.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை - நமீபியா
- இடம் - கர்டினியா பார்க், ஜீலாக்
- நேரம் - காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)
நேருக்கு நேர்
இலங்கை - நமீபியா அணிகள் இதுவரை ஒருமுறை மட்டுமே டி20 போட்டியில் மோதியுள்ளன. அப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
போட்டியைக் காணும் வழிமுறை
உலகக்கோப்பை போட்டிகள் அனைத்தும் டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வாயிலாகவும் போட்டியை இந்திய ரசிகர்கள் காணலாம்.
உத்தேச அணி
இலங்கை: குசல் மெண்டிஸ், பதும் நிஷங்க, பானுக ராஜபக்ஷ, தனுஷ்கா குணதிலகா, சரித் அசலங்கா, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, சமிக கருணாரத்னே, துஷ்மந்தா சமீர, மதுஷன்.
நமீபியா: ஸ்டீபன் பார்ட், லோஹண்ட்ரே லூரென்ஸ், கெர்ஹார்ட் எராஸ்மஸ் (கே), திவான் லா குக், ஜேஜே ஸ்மிட், டேவிட் வைஸ், ஜேன் கிரீன், ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், மைக்கேல் வான் லிங்கன், பென் ஷிகோங்கோ.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - குசால் மெண்டிஸ்
- பேட்டர்ஸ் – பானுக ராஜபக்ஷ, பதும் நிஷங்க, ஜெர்ஹார்ட் எராஸ்மஸ், ஸ்டீபன் பார்ட்
- ஆல்ரவுண்டர்கள் – ஜேஜே ஸ்மித், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க
- பந்துவீச்சாளர்கள் – டேவிட் வைஸ், மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர.
Win Big, Make Your Cricket Tales Now