
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அக்டோபர் 16 முதல் 21 வரை தகுதிச்சுற்று போட்டிகளும், அதன்பின்னர் சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் இரு பிரிவுகளாக பிரித்து நடத்தப்படுகின்றன.
க்ரூப் 1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளும், க்ரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த 8 அணிகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் ஆடும் அணிகள்.
சூப்பர் 12 சுற்றுக்கான எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்று போட்டிகளில் ஆடி அதன்மூலம் தேர்வாகும். தகுதிச்சுற்றில் ஆடும் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.