
Sri Lankan team arrives in Bangladesh for three-match ODI series (Image Source: Google)
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக குசால் பெரேரா தலைமையிலான 20 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் மே 23ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை, தாக்காவில் நடைபெறவுளது.
இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றடைந்தது. அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மூன்று நாள்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.