IND vs SL: இலங்கை அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவரை தொடர்ந்து அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.
இத்தொடருக்கான இந்திய அணி கடந்த மாதம் இலங்கை சென்று தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியும் நாடு திரும்பியுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணியில் நேற்றைய தினம் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஷிராந்தா நிரோஷனாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 4 நாட்களில் இந்த தொடர் தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் திட்டமிட்டபடி இத்தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now