
Sri Lanka's 'Terrible Trio' Dropped From Upcoming Series Against India (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முந்தைய தினம், இலங்கை அணியின் குசால் மெண்டிஸ், நிரோஷன் டிவெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் பயோ பபுள் சூழலை விட்டு, பொது இடங்களுக்கு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பின் குற்றஞ்சாட்டப்பட்ட வீரர்களும் தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்கள் இங்கிலாந்து தொடரிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் நேற்று அந்த மூன்று வீரர்களும் இலங்கை சென்றடைந்தனர்.