Advertisement
Advertisement
Advertisement

PAKW vs WIW: ஸ்டாஃபானி டெய்லர் அபாரம்; பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது விண்டீஸ்!

பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 14, 2021 • 18:39 PM
Stafanie Taylor Becomes Fastest Women Cricketer To Reach 5000 ODI Runs
Stafanie Taylor Becomes Fastest Women Cricketer To Reach 5000 ODI Runs (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீச, அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களைச் சேர்த்தது. 

Trending


பாகிஸ்தான் அணி தரப்பில் முனிபா அலி 58 ரன்களையும், அலியா ரியாஸ் 44 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் செல்மன், ஆலியா ஆலைன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி  15 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டாஃபானி டெய்லர் - ஹேலி மேத்யூஸ் இணை அதிரடியாக விளையாடியது. இதில் மேத்யூஸ் 49 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்டாஃபானி டெய்லர் சதமடித்ததுடன் அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். மேலும் இப்போட்டியில் டெய்லர் சதமடித்ததன் மூலம் சர்வதே மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த வீராங்கனை எனும் சாதனையையும் படைத்தார். 

Also Read: T20 World Cup 2021

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷும் செய்தது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement