Advertisement
Advertisement
Advertisement

ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹசரங்கா!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியில் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

Advertisement
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹசரங்கா!
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹசரங்கா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 30, 2023 • 12:43 PM

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் ஜனவரி 6ஆம் தேதி முதலும், டி20 தொடர் ஜனவரி 14ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 30, 2023 • 12:43 PM

இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு குசால் மெண்டிஸ் கேப்டனாகவும், சரித் அசலங்கா துணைக்கேப்டனாவுக் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை, உலகக்கோப்பை தொடர்களில் விளையாடமல் இருந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் வநிந்து ஹசரங்கா மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பியதுடன், டி20 அணிக்கான கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். 

Trending

மேலும் இந்த அணியில் தசுன் ஷனகா, தில்சன் மதுஷங்கா, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, பதும் நிஷங்கா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஏற்கெனவே உலகக்கோப்பையில் அடைந்த படுதோல்விக்கு பின் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இலங்கை அணி: குசல் மெண்டிஸ் (கே), சரித் அசலங்க, பதும் நிஷங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷனகா, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, தில்ஷன் மதுஷங்க, துஷ்மந்த சமீர, துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷான், அசித்த ஃபெர்னாண்டோ, அகில தனஞ்சய, ஜெப்ரி வான்டர்சே, சமிக குணசேகரா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement