
Start Of 1st T20I Between India & Ireland Delayed Due To Rain (Image Source: Google)
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று டப்ளிங் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு போட்டிக்கான டாஸ் போடப்படுவதாக இருந்தது. எனினும் மாலையில் இருந்து டப்ளின் நகரம் முழுவதும் மழை பெய்து வந்ததால், டாஸானது 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது. அதன்பின்னர் டாஸ் போடப்பட்டு இந்திய அணிக்கு சாதகமாக சென்றது.
இந்நிலையில் டாஸ் போடப்பட்ட போதும், போட்டி தொடங்காததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஃபீல்டிங்கிற்காக அயர்லாந்து வீரர்கள் களமிறங்க தயாரான உடனே மீண்டும் மழை குறுக்கிட்டது. டாஸுக்கு பிறகு மைதானத்தை மூடி வைத்திருந்த கவர்களை ஊழியர்கள் அவசர அவசரமாக நீக்கினர். எனினும் மீண்டும் மழை வந்தவுடனே அவசர அவசரமாக கவர் செய்தனர்.