Advertisement

ராகுல் திவேத்தியாவுக்கு அட்வைஸ் வாழங்கிய கிரேம் ஸ்மித்!

ராகுல் திவேத்தியா ட்விட்டரில் கவனம் செலுத்துவதைவிட, தன்னுடைய திறமையை இன்னும் கூடுதலாக மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Advertisement
Stay off Twitter, focus on your game: Graeme Smith tells Rahul Tewatia after Ireland T20I snub
Stay off Twitter, focus on your game: Graeme Smith tells Rahul Tewatia after Ireland T20I snub (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 21, 2022 • 01:05 PM

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. சீனியர் வீரர்கள் ஜூலையில் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க உள்ளதால் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, ஐபிஎலில் சிறப்பாக சோபித்த வீரர்களுக்கு இந்த தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 21, 2022 • 01:05 PM

இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கருதப்பட்டதால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

Trending

இந்நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதிமுதல் அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 15ஆவது சீசனில் கோப்பை வென்ற கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த் இங்கிலாந்து செல்லும் அணியுடன் இணைய உள்ளதால், அவர் இத்தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.

இதில் இந்திய அணியில், தென் ஆப்பிரிக்க தொடரில் வாய்ப்பினை பெறாத சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறந்த பினிஷர்களில் ஒருவராக இருந்த ராகுல் திவேத்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி வெளியான பிறகு, ட்வீட் வெளியிட்ட ராகுல் தேவத்தியா, “எதிர்பார்ப்புகள் காயப்படுத்துகிறது” எனத் தெரிவித்து, அழும் இமோஜியை வெளியிட்டிருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கரீம் ஸ்மித், ராகுல் திவேத்தியா குறித்து பேசியுள்ளார். அதில், “இந்திய அணியில் பல திறமையானவர்கள் இருப்பதால், அணியை தேர்வு செய்வது சுலபமல்ல. மைதானத்திற்கு ஏற்ற வீரர்களை கேப்டன் ரோஹித் ஷர்மாவும், கோச் ராகுல் திராவிட்டும் தேர்வு செய்து வருகிறார்கள்.

ராகுல் திவேத்தியா ட்விட்டரில் கவனம் செலுத்துவதைவிட, தன்னுடைய திறமையை இன்னும் கூடுதலாக மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அப்படி நீங்கள் கடினமாக முயற்சி செய்து வந்தால், நிச்சயம் உங்களுக்கான இடம் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement