சர்வதேச கிரிகெட்டிலிருந்து மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் ஓய்வு!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின். தற்போது 34 வயதாகும் அவர், கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.
இவர் இங்கிலாந்து அணிக்காக 36 டெஸ்ட், 69 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 254 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவர் கடைசியாக இங்கிலாந்து அணிக்காக 2017ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார்.
Trending
கடந்த 6 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இடம் பெறாத ஸ்டீவன், இன்று சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். தற்போது ஸ்டீவன் பின்னும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now