Advertisement

ஸ்டிர்லிங், ஓ பிரையன் அசத்தல்; அயர்லாந்து அபார வெற்றி!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 07, 2021 • 19:22 PM
Stirling and O’Brien star with bat after Campher delivers on cue with the ball
Stirling and O’Brien star with bat after Campher delivers on cue with the ball (Image Source: Google)
Advertisement

சம்மர் டி20 பேஷ் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது. 

Trending


இதில் அதிகபட்சமாக முகமது உஸ்மான் 35 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் எளிய இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - கெவின் ஓபிரையன் இணை அதிரடியாக தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தது. இதில் பால் ஸ்டிர்லிங் அரைசதம் கடந்து அசத்தினார். கெவின் ஓ பிரையன் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இருப்பினும் 18.5 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement