வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இதனை செய்ய வேண்டும் - இர்ஃபான் பதான்
வெளிநாடுகளில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டுமென முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் இத்தோல்வி குறித்தான விவாதம் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் இத்தொடரில் சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் எந்தவித தாக்கத்தையும் ஏற்பாடுத்தாததே காரணம்.
Trending
இதற்கிடையில், வெளிநாடுகளில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டுமென முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
Indian middle order looks like it will change, Should too. But I strongly believe in having a wrist spinner in overseas condition. Which will have a solid wicket taking option in any condition.
— Irfan Pathan (@IrfanPathan) January 15, 2022
இதுகுறித்த இர்ஃபான் பதானின் ட்விட்டர் பதிவில், “இந்திய மிடில் ஆர்டரும் மாறும் போல் தெரிகிறது. ஆனால் வெளிநாடுகளில் ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எந்த நிலையிலும் உறுதியான விக்கெட் எடுக்கும் விருப்பம் இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now