
இந்தியா - நியூசிலாந்து இடையே கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் அடித்தன.
49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்ய, 283 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் சில ஓவர்கள் எஞ்சியிருக்க, இந்திய அணி டிக்ளேர் செய்துவிட்டு நியூசிலாந்தை இலக்கை விரட்ட பணித்தது.
284 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தாலும், டாம் லேதமும், நைட் வாட்ச்மேனாக இறங்கிய சோமர்வில்லும் இணைந்து அபாரமாக ஆடி கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் நியூசிலாந்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.