
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் தான், ரோஹித் சர்மாவின் ஓபனிங் பார்ட்னர். கேஎல் ராகுல் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாததால் மயன்க் அகர்வால், ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடிவருகிறார்.
மயன்க் அகர்வால் - ஷுப்மன் கில் ஆகிய இருவருமே டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த நிலையில், ஷுப்மன் கில்லை பென்ச்சில் உட்காரவைத்துவிட்டு மயன்க் அகர்வாலை ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கிவிட்டது இந்திய அணி நிர்வாகம்.
ஆனால் ஷுப்மன் கில்லைத்தான் தொடக்க வீரராக இறக்கிவிட்டிருக்க வேண்டும். மயன்க் அகர்வாலைவிட ஷுப்மன் கில்லுக்குத்தான் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும் என்று சிலர் கருத்து கூறுகின்றனர். ஷுப்மன் கில்லும் இந்திய அணிக்காக ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓபனிங் செய்திருந்தாலும், மயன்க் அகர்வால் தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.