
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது இதுவரை இந்திய அணிக்கு மோசமாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னர் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது தற்போது அரையிறுதிக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வியை சந்தித்தது.
இந்த இரண்டு மோசமான தோல்விகள் காரணமாக இந்திய அணியின் ரன்ரேட் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இனிவரும் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.