இது ஆரம்பம் தான் முடிவு அல்ல - சுனில் கவாஸ்கர்!
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியை முதலில் மறக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தொடரில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் தற்போது பல்வேறு விமர்சனங்களை சமூக வலைதளம் வாயிலாக சந்தித்து வருகிறது.
மேலும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஒரு சில வீரர்களும் தற்போது ரசிகர்கள் அதிக அளவில் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான மெசேஜை இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியை முதலில் மறக்க வேண்டும். அந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகமாக சிந்திக்கக்கூடாது. இப்போதுள்ள சூழ்நிலையில் உலக கோப்பை தொடரின் அடுத்தடுத்த போட்டிகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே இந்திய அணி கவனம் செலுத்தவேண்டும். நிச்சயம் இந்திய வீரர்கள் இந்த தோல்வியை மறந்து அடுத்தடுத்த போட்டிக்கு தயாராவார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.
மேலும் எதிர்வரும் போட்டிகளை கைப்பற்றும் அளவிற்கு பலம் இந்திய அணியில் உள்ளதால் தற்போது வெற்றிக்கான யுக்தியை மட்டுமே யோசிக்க வேண்டும். இது தொடரின் ஆரம்பம் தான் முடிவு அல்ல” என தெரிவித்துள்ளார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக 31ஆம் தேதி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இந்திய அணியின் பலத்திற்கு சமமாக நியூசிலாந்து அணியும் இருப்பதனால் அந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
Win Big, Make Your Cricket Tales Now