
Sunrisers Hyderabad vs Chennai Super Kings: Probable XI (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலிடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியும், ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியும் உள்ளதால் இப்போட்டியின் மீதான சுவாரஸ்யம் சற்று குறைந்து தான் காணப்படுகிறது.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடி 10 போட்டியில் 8-ல் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான இடத்தை உறுதிசெய்துள்ளது.