லக்னோ அணியின் குளோபல் மெண்டராக கவுதம் காம்பீர் நியமனம்!
ஐபிஎல் தொடரின் லக்னோ அணி நிர்வாகம் கவுதம் காம்பிரை குளோபல் மெண்டர் என்று பதவி உயர்வு கொடுத்திருக்கிறது.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் பாஜக சார்பில் டெல்லியில் எம்பியாகவும் செயல்பட்டு வருகிறார்.
ஆனால் இவர் தற்போது அரசியலை விட கிரிக்கெட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு கம்பீர் தலைமையில் லக்னோ அணி ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று வரை சென்றது. எனினும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியிடம் லக்னோ அணி தோல்வியை தழுவியது.
Trending
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள புதிய டி20 லீக் தொடரில் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி நிர்வாகம் டர்பன் அணியை வாங்கியுள்ளது. இந்த நிலையில் லக்னோ அணி நிர்வாகம் கவுதம் காம்பிரை குளோபல் மெண்டர் என்று பதவி உயர்வு கொடுத்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து லக்னோ அணி தொடர்பான கிரிக்கெட் முடிவை உலக அளவில் இனி கவுதம் காம்பீர் தான் பார்த்துக் கொண்டு அணியை வழிநடத்துவார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கவுதம் காம்பீர், “தம் மீது நம்பிக்கை வைத்த குளோபல் மெண்டராக பதவி கொடுத்திருக்கும் சூப்பர் ஜெயிண்ட் அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை பொறுத்த வரைக்கும் எந்த அணியை பொறுத்த வரைக்கும் பூலோகம் எதையும் தீர்மானிக்காது. அணி வெற்றி பெற சிறந்த வழிமுறை தான் முக்கியம். தற்போது உலகளாவிய அளவில் அணியை வழி நடத்தும் பொறுப்பு என்பது எனக்கு கிடைத்தது கூடுதல் பொறுப்பு .
என்னுடைய உத்வேகத்திற்கு தற்போது சர்வதேச இறக்கைகள் கிடைத்துள்ளது. உலக அளவில், சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி கால் தடம் பதித்துள்ளது எனக்கு பெருமையாக இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி எனக்கு தூங்கா இரவுகள் காத்துக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now