
தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே திங்கட்கிழமை நடந்த முதல் லீக் ஆட்டத்தின்போது, இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா காணொளி வாயிலாக வர்ணனையில் ஈடுபட்டார்.
அப்போது போட்டி வர்ணனையாளர், சுரேஷ் ரெய்னாவிடம் தென்னிந்திய கலாசாரத்தை எப்படி தழுவுகிறீர்கள் என்று கேட்டார். அவர் வேட்டி, நடனம், விசில் அடிப்பது போன்ற கலாசாரத்தை கடைப்பிடிப்பதை பார்ப்பதால் இந்த கேள்வி எழுப்பப்படுவதாக வருணனையாளர் கூறினார். காரணம், சிஎஸ்கே அணியின் முழக்கமே "விசில் போடு" என்ற வாசகம்தான்.
இதைத்தொடர்ந்து பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "நான் நினைக்கிறேன். நானும் பிராமணன்தான். சென்னையில் 2004இல் இருந்து ஆடுகிறேன். இந்த கலாசாரத்தை நேசிக்கிறேன். எனது சக அணி வீரர்களை நேசிக்கிறேன். அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரி, பாலா பாய் (எல். பாலாஜி) ஆகியோருடன் விளையாடியிருக்கிறேன்.