
Suresh Raina Reacts To MS Dhoni Handing Over Chennai Super Kings Captaincy Duties To Ravindra Jadeja (Image Source: Google)
ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு முன்பே கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளார். மேலும் புதிய கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என்றும் சிஎஸ்கே அறிவித்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் தோனிக்கு வாழ்த்தும், அவரது சாதனைக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
தோனியின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், தோனியின் ராஜினாமா முடிவுக்கு மதிப்பளிப்பதாக கூறியுள்ளது. தோனி எந்த முடிவு எடுத்தாலும் அது சிஎஸ்கேவின் நலனுக்காக தான் இருக்கும். தோனியின் இந்த முடிவுக்கு பின் பல காரணங்கள் உள்ளன. தோனியின் ராஜினாமா முடிவை ஏற்று கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.