ஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் ட்வீட் செய்த சுரேஷ் ரெய்னா!
ஹர்பஜன் சிங் நடித்து நாளை வெளியாகவுள்ள பிரண்ட்ஷிப் திரைப்படம் குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழில் ட்வீட் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பிக் பாஸ் புகழ் லோஸ்லியா நடித்து வரும் திரைப்படம், 'பிரண்ட்ஷிப்'.
ஜான் பால் ராஜ், சாம் சூர்யா ஆகியோர் இயக்கி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நாளை முதல் பிரண்ட்ஷிப் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், பஜ்ஜி பா ஹர்பஜன் சிங் என் அண்ணாத்த! பிரண்ட்ஷிப் டிரைலர், டிஸர் எல்லாம் வலிமையா இருக்கு, படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கும். பிரண்ட்ஷிப் படகுழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களே நீங்க எல்லோரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்று பதிவிட்டுள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
சுரேஷ் ரெய்னாவின் இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now