
Suryakumar can definitely walk into WC squad: VVS Laxman (Image Source: Google)
நடப்பாண்டு டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் - நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. இந்தியாவில் நடக்கவிருந்த இத்தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு முன்பாக கடைசியாக நடக்கும் டி20 தொடர் இலங்கைக்கு எதிரானதுதான். இலங்கைக்கு எதிராக ஷிகர் தவான் தலைமையில் ஆடும் இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற அந்த இளம் வீரர்கள் இந்த தொடரை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உள்நாட்டு போட்டிகள், இந்தியா ஏ அணிக்காக நீண்டகாலமாக சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவுக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நல்ல வாய்ப்பு இது. எனவே இலங்கை தொடரில் அவர் சிறப்பாக ஆடியாக வேண்டும்.