
Cricket Image for IND vs ENG: ஒருநாள் தொடரில் சூர்யகுமார், குர்னால், பிரதீஷ்-க்கு வாய்ப்பு! (Indian Cricket Team (Image Source: Google))
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2 வெற்றிகளைப் பெற்று தொட்ரில் சமனிலையில் உள்ளன.
இதற்கிடையில், இரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர்களாக குர்னால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசதமயம் உடற்தகுதி காரணமாக இங்கிலாந்து டி20 தொடரிலிருந்து விலக்கப்பட்ட தமிழ்நாடு வேகப்புயல் நடராஜன் தங்கராசு, உடற்தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்ததை அடுத்து, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.