IND vs SA: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் டி.20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இப்போட்டியில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுலின் அரைசதங்களினால் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது.
Trending
இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் டி.20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் நடப்பு ஆண்டில் (2022) நடைபெற்ற டி20 போட்டிகளில் 732 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இதன் மூலம், ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக ஷிகர் தவான் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் 689 ரன்கள் குவித்திருந்ததே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது, இதனை தற்போது சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா உள்பட இந்திய அணியின் முக்கிய வீரர்கள் கூட ஒரே ஆண்டில் 700+ ரன்கள் அடித்தது இல்லை.
டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்
- சூர்யகுமார் யாதவ் – 732 ரன்கள் – 2022ஆம் ஆண்டு
- ஷிகர் தவான் – 689 ரன்கள் – 2018ஆம் ஆண்டு
- விராட் கோலி – 641 ரன்கள் – 2016ஆம் ஆண்டு
- ரோஹித் சர்மா – 590 ரன்கள் – 2018ஆம் ஆண்டு
- ரோஹித் சர்மா – 497 ரன்கள் – 2016ஆம் ஆண்டு
Win Big, Make Your Cricket Tales Now