
suryakumar-yadav-met-with-his-wife-devisha-shetty-after-65-days-viral-video (Image Source: Google)
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்ற இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் தொடரை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் காயமடைந்ததன் விளைவாக, அவர்களுக்கு மாற்று வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டதையடுத்து, இருவரும் இலங்கையிலிருந்து நேரடியாக இங்கிலாந்து சென்றனர்.
முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள், அவர்கள் குடும்பத்தினரை அழைத்துச்செல்ல அனுமதியளிக்கப்பட்டது. எனவே சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா ஷெட்டியும் இங்கிலாந்து சென்றார்.