
Suryakumar Yadav Should Be More Consistent - salman Butt (Image Source: Google)
அடுத்தாண்டு டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்திய அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அறிமுகமாகி அபாரமாக ஆடினர்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும், சிறப்பான பவுலிங்கும் தான் காரணம்.
முதல் போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சூர்யகுமார் யாதவ், 2ஆவது போட்டியில் ஒரு ரன்னிலும், 3ஆவது போட்டியில் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் இன்னும் அவரது ஷாட் செலக்ஷனில் முதிர்ச்சியடையவில்லை. மோசமான ஷாட் செலக்ஷனில் ஆட்டமிழந்துவிடுகிறார்.