Advertisement

வலைபயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்; வைரலாகும் காணொளி!

காயத்திலிருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வலை பயிற்சியில் ஈடுபட்ட காணொளி வைரலாகியுள்ளது.

Advertisement
வலைபயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்; வைரலாகும் காணொளி!
வலைபயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 06, 2024 • 08:09 PM

இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 06, 2024 • 08:09 PM

இதனால் அந்த அணி தங்களது முதல் வெற்றியைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.  அந்தவகையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்த்து மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயத்திலிருந்து மீண்டு நாளைய போட்டியில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending

அதன்படி நேற்றைய தினம் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய அணியின் மிஸ்டர் 360 என செல்லமாக அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், தனது வழக்கமான பாணியில் ஷாட்டுகளை அடித்து பயிற்சி மேற்கொண்ட காணொளியை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இக்காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

 

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். ஏனெனில் கடந்த ஐபிஎல் சீசனில், மும்பைக்காக 16 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 43 சராசரி மற்றும் 181 ஸ்டிரைக் ரேட்டில் 605 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement