ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்திரேலியா - விண்டீஸ் தொடர் மீண்டும் தொடக்கம்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 26ஆம் தேதி நடைபெறுமென வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முந்தினம் நடைபெற இருந்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங்கை தேர்வுசெய்திருந்தது.
Trending
இதற்கிடையில் அணி ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அப்போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வீரர்கள், அணி ஊழியர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனையின் முடிவில் வீரர்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதால், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் மீண்டும் தொடங்க இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவுசெய்துள்ளன.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் திட்டமிட்டபடி இன்றும் (ஜூலை 24), ஒத்திவைக்கப்பட்ட போட்டியை ஜூலை 26ஆம் தேதியும் நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now