
Syed Mushtaq Ali Trophy: Injured Dinesh Karthik ruled out of team (Image Source: Google)
சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர் நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இதில் தமிழ்நாடு அணி எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும் லீக் போட்டிகள் அனைத்தையும் லக்னோவில் விளையாடுகிறது.
இந்நிலயில் சயீத் முஷ்டாக் அலி கோப்பைப் தொடரிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் இறுதிச்சுற்றிலேயே ஊசி செலுத்திக்கொண்ட பிறகு தான் விளையாடினார். எனவே சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.