
T-20 World Cup: Fakhar Zaman's fifty helps Pakistan post a total on 186 (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 19 ரன்னிலும், பாபர் அசாம் 15 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதன்பின் களமிறங்கிய ஃபகர் ஸமான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
அவருக்கு துணையாக சோயிப் மாலிக் 28 ரன்களையும், ஆசிஃப் அலி 32 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை சேர்த்தது.