
T-20 World Cup: Sri Lanka Add Five More Players To Their Squad (Image Source: Google)
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இலங்கை அணி ஓமன் சென்று, அந்த அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் அதே அணி டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அணியில் ஒரு சில வீரர்கள் காயமடைந்துள்ளதால், மேலும் ஐந்து வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்த்துள்ளது. அதன்படி பாத்தும் நிசங்க, மினோத் பானுகா, அஷேன் பண்டாரா, லக்ஷன் சண்டகன், ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.