
T20 WC 13th Match: Tough Australia Rout South Africa, Restricts Them At 118/9 (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதனைத்தொடர்ந்து சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் மட்டும் நிலைத்து விளையாடி 40 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.