
T20 WC 14th Match: England trash West Indies by 6 wickets win (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 55 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் 2.2 ஓவர்களை வீசிய ஆதில் ரஷித் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.