
T20 WC 18th Match: West Indies finishes off 143 runs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி லிண்டல் சிம்மன்ஸ் - எவின் லூயிஸ் இணை ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் எவின் லூயிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் எவின் லூயிஸ் 56 ரன்களுடன் ஆட்டமிழக்க, லிண்டல் சிம்மன்ஸும் 16 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரான் ஆகியோரும் 12 ரன்களில் வெளியேறினர்.