
T20 WC 19th Match: New Zealand Finishes off 134 in their 20 overs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் - டரில் மிட்செல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கப்தில் 17 ரன்களிலும், டரில் மிட்செல் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் நீஷமும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவன் கான்வே 27, கிளென் பிலீப்ஸ் 13 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினர்.